மத்திய- மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

கோவில்பட்டியில் மத்திய- மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்டரங்கில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள், மத்திய நிதி குழு மானிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிராம வளர்ச்சித்திட்ட உதவி இயக்குனர்கள் நாகராஜன், உலகநாதன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் பொறியாளர்கள், களப்பணியாளர்கள், கோவில்பட்டி, கயத்தார் யூனியனை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய- மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆய்வு நடத்தி, அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்