வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

நாளை நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-23 19:14 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், டித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அந்தந்த துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்