போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஆய்வு கூட்டம்

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2023-02-25 18:45 GMT

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு நடந்தது.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் தூத்துக்குடி சிவில் உரிமைகள் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சேவியர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஷ் ஜெபமணி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் சுரேஷ், திருச்செந்தூர் வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், சாத்தான்குளம் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்