போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-17 22:17 GMT

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர், குற்ற வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆய்வு நடத்தி, விசாரணை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழங்குகளில் சிறப்பாக செயல்பட்டு புலன்விசாரணை நடத்திய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ் (நெல்லை புறநகர்), யோகேஷ்குமார் (வள்ளியூர்), ராமகிருஷ்ணன் (சேரன்மாதேவி), ராஜூ (நாங்குநேரி), வெங்கடேஷ் (அம்பை-பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்ேபாது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்