பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

Update: 2022-06-11 15:14 GMT

வாய்மேடு:-

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப உதவியாளர் பாலகுரு கலந்துகொண்டு வீடு கட்டும் பணிகளை தொடங்க உள்ள பயனாளிகளிடம் இந்த வாரத்துக்குள் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத், ஊராட்சி செயலாளர் அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   

Tags:    

மேலும் செய்திகள்