விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.
அன்னவாசல்:
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவடைந்து விடைத்தாள்கள் அனைத்தும் மாவட்டம் முழுவதும் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி இலுப்பூர் கல்வி மாவட்ட மையத்தில் நேற்று தொடங்கியது. இந்தப்பணியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.