நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

நீர்வரத்து அதிகரித்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

Update: 2022-08-09 15:45 GMT

பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் 13 நாட்களை கடந்தும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்