ரூ.31 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், ரூ.31 லட்சத்தில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

Update: 2023-09-16 22:30 GMT

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், ரூ.31 லட்சத்தில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.

வடமதுரை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யலூர் நகர செயலாளர் கருப்பன் வரவேற்றார். வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்