மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்

மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-06-03 18:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் ஆலங்குடி மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் உயர்மின் அழுத்த கம்பியில் பழுதை சரி செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக மின்வாரிய போர்மேன் மாங்கோட்டை கீழப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் கணேசனை பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்