ஓய்வுபெற்றோர் சங்க கூட்டம்
சிவகிரி வட்டார ஓய்வுபெற்றோர் சங்க கூட்டம் நடந்தது.;
சிவகிரி:
சிவகிரி வட்டார ஓய்வுபெற்றோர் சங்க அலுவலகத்தில் சிவகிரி வட்ட கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். தணிக்கையாளர் வேலுச்சாமி, நல நிதித் தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கடற்கரை வரவேற்றார். கடந்த ஆண்டு அறிக்கையை செயலாளர் உலகநாதன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் ராமர் சமர்ப்பித்தார். நலநிதி அறிக்கையை கூடலிங்கமும், அமரநிதி அறிக்கையை அருணாச்சலமும் தாக்கல் செய்தனர்.
ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வு ஓய்வூதியத்தை படிவத் திருத்தம் செய்து எளிதில் பெற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கரலிங்கம், மாவட்ட கவுரவ தலைவர் வைரவன், மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், மேட்டுப்பட்டி ஜனநாயக நடுநிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் கோபால்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் பாலகுரு நன்றி கூறினார்.