ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-06-21 20:53 GMT

நாகர்கோவில், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். 78 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஆதித்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாடசாமி, சைமன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்