ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-07 19:19 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள நெல்லை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சங்க செயல் தலைவர் சிவதாணுதாஸ் தலைமை தாங்கினார். தாணுமூர்த்தி, லட்சுமணன், கிருபாகரன், பெருமாள், ராமமூர்த்தி, வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. செயலாளர் கருமலையான் தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணை தலைவர்கள் பால்ராஜ், முத்துகிருஷ்ணன், வெங்கடாசலம், துணை செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பேசினார்கள். மாநில குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.

இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்