ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்க செயற்குழு கூட்டம்

சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்க செயற்குழு கூட்டம்

Update: 2023-02-05 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலகத்தில் ஒய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி, வட்டத்தலைவர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அருளப்பன் வரவேற்றார். அடுத்த மாதம்(மார்ச்) 26-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டின் கோரிக்கைகளை பற்றி மாவட்ட செயலாளர் குணசேகரன் விளக்கி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வேன்களில் சென்று மாநாட்டில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்ட பொருளாளர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்