ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரிகள்ஆசிரியர் நலச்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரிகள்ஆசிரியர் நலச்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத்தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவபெருமான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை மாநில துணைத்தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவினை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள்