ஓய்வு பெற்ற ஆசிரியர், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி
பாவூர்சத்திரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.;
பாவூர்சத்திரம்;
பாவூர்சத்திரம் செல்வ விநாயகபுரத்தில் வசித்து வந்தவர் லாரன்ஸ் (வயது 63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று காலையில் கல்லூரணி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த ஜெயராம் என்பவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.