ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி

ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-17 21:46 GMT

ஆவடி,

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் தயாநிதி (வயது 62). ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு. இவருக்கு மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரை சேர்ந்த சிவராஜ் (47) மற்றும் சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் (54) ஆகிய இருவரும் தயாநிதியிடம், நாங்கள் இருவரும் உங்கள் இடத்தில் வீடு கட்டித்தருகிறோம். அதில் வரும் லாபத்தில் உங்களுக்கு 40 சதவீதமும், எங்களுக்கு 60 சதவீதமும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினர். அதற்கு தயாநிதி சம்மதம் கூறினார். இதையடுத்து சிவராஜ் மற்றும் லோகநாதன் இருவரும் தயாநிதிக்கு தெரியாமல் அந்த நிலத்தை பலருக்கு பிரித்து கொடுப்பதாக கூறி ரூ.1 கோடியே 45 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் சொன்னபடி தயாநிதிக்கு லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றினர்.

2 பேர் கைது

இதுகுறித்து தயாநிதி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து நிலமோசடியில் ஈடுபட்ட சிவராஜ் மற்றும் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்