ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.

Update: 2023-01-02 19:53 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள இனாம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் வெம்பக்கோட்டையில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இனாம் மீனாட்சிபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது சிவகாசியில் இருந்து செவல்பட்டிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஜெயபிரகாஷ் நாராயணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயபிரகாஷ் நாராயணன் மகன் விமல்ராஜ் (38) அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், வேன் டிரைவர் சித்துராஜபுரம் காயம்பு நகரை சேர்ந்த மாரிராஜன் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்