ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் சாவு
நாகமலைபுதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.;
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை ஆனையூர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 64). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவர் நேற்று உசிலம்பட்டி அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றபோது திருமங்கலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச்சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.