ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து பலி

கந்திலி அருகே ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2023-04-18 18:49 GMT

கந்திலி ஒன்றியம் சின்னகண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67), ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்ய முயன்றபோது கால் தவறி 50, ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உள்ளார். நேற்று காலை வீட்டில் பன்னீர்செல்வம் இல்லாததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் விழுந்து உள்ளது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்