நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பார்வதிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மேலாடையின்றி அரை நிர்வாண போராட்டம் நடந்தது. அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும், மின்வாரிய பவள விழா சலுகை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானாசீர்வாதம் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாநில உதவி தலைவர் அன்ன தீபம் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், இணை செயலாளர்கள் பாக்கிய சந்திரா, குமரேசன், சிவதாணு, குமார், வனஜா, குமரேசன், உதவி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டபொருளாளர் குஞ்சன் பிள்ளை நன்றி கூறினார். போராட்டத்தில் பங்கேற்ற ஆண்கள் மேலாடை இன்றியும், பெண்கள் வாயில் கருப்பு துணியை கட்டியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.