பஸ் மோதி ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர் சாவு

விக்கிரவாண்டி அருகே பஸ் மோதி ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர் சாவு

Update: 2023-06-27 18:45 GMT

விக்கிரவாண்டி

சென்னை வ.உ.சி. நகர் தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 65). சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ரத்தினம் மீண்டும் சென்னை செல்வதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பஸ் ஏறுவதற்காக நடந்துசென்று கொண்டிருந்தார். விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்