ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
கடையநல்லூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது;
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கடையநல்லூர் வட்ட மாதாந்திர கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். செயலாளர் தங்கவேல் கூட்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் அப்துல் ஹக் வரவு- செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியது போல் மாநில அரசும் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார்.