ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.1000 மருத்துவப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர் பிரச்சினைகளை பேசி தீர்வு காண கூட்டு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.