ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-06 18:37 GMT

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க ஒன்றிய தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகி வடிவேலு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கன்வீரர் கூட்டமைப்பு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் சரோஜா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் மாதாந்திர சிறப்பு ஊதியமாக ரூ.750 வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறைகளிலும் உள்ள நிரந்தர காலமுறை ஊதியத்திலான காலிப்பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை ஒதுக்கி அதில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் பணிஉயர்வு வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்தணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்