ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜ்லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெரோம் மிலாடு (வயது 62), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று மாலை அரசு பள்ளி ஆசிரியரான மனைவி மெல்சி லெட்டுடன் ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் அருகே உள்ள லெமூரியா கடற்கரைக்கு வந்தார்.
அங்கு அவர்கள் கடற்கரை அழகை ரசித்தனர். பின்னர் இருவரும் கடலில் இறங்கி கால் நனைத்து கொண்டிருந்தனர்.
ராட்சத அலையில் சிக்கி சாவு
அப்போது திடீரென்று ராட்சத அலை வந்தது. அது கண் இமைக்கும் நேரத்தில் ஜான் ஜெரோம் மிலாடுவை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் இழுத்து செல்லப்பட்டார் இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ஜான் ஜெரோம் மிலாடு மயக்கம் அடைந்தார். அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான் ஜெரோம் மிலாடு இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.