ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மனைவியுடன் பலி

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-22 20:25 GMT

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் தனபால்(வயது72). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி தமிழரசி(58). நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் தனபாலும் அவரது மனைவி தமிழரசியும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தனபால் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழரசி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழரசி உயிரிழந்தார்.

விசாரணை

எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாபநாசம் தட்டுமால் படுகையை சேர்ந்த சக்திவேல்( 23) படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து இறந்த தனபால் உறவினர் திருப்பாலைத்துறையை சேர்ந்த முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உயரிழந்த தனபால்- தமிழரசி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது மனைவியுடன் உயிரிழந்த சம்பவம் திருப்பாலத்துறை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்