ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 17:50 GMT

ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் வெங்கட்ரமணன், துணைத்தலைவர்கள் ராமமூர்த்தி, மாசிலாமணி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி, கடந்த ஜூலை மாதம் முதுல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ.1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்