சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் மனைவி தற்கொலை

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-09 23:18 GMT

தற்கொலை

சேலம் அங்கம்மாள் காலனி அண்ணாநகரை சேர்ந்தவர் சண்முகம். இவர், கனிம வளத்துறையில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுபத்ரா (வயது 70). இவர்களது மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். திருப்பூரில் உள்ள மகள் வீட்டில் சண்முகம் வசித்து வருகிறார். சுபத்ரா மட்டும் சேலத்தில் தனியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை சுபத்ரா தனது வீட்டின் முன்பு உள்ள ஷெட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சுபத்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மூதாட்டி சுபத்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்