ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சங்கரவடிவு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சுடலைமுத்து, குட்டி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிச்சையா, அனைத்து ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் ஈனமுத்து, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அகவிலைப்படி உடன் இணைத்து வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க பாளையங்கோட்டை தலைவர் முத்துமாரி நன்றி கூறினார்.