ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-10-11 21:09 GMT

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று அரைநிர்வாண போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர். மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகள்

அப்போது, அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வினை மத்திய அரசு அளித்த தேதி முதல் நிலுவையுடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்