ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் கைது

ஆவணங்களில் முறைகேடு செய்ததாக கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 20:32 GMT

கும்பகோணம்

ஆவணங்களில் முறைகேடு செய்ததாக கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டு ஊழியர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது62). இவர் கும்பகோணம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களில் முறைகேடு செய்ததாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

கைது

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் தலைமறைவான பாலகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 16-ந் தேதி பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்