மலையேறிய ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தவறி விழுந்து காயம்
மலையேறிய ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தவறி விழுந்து காயம் அடைந்தார்.
சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 63). ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இவர் லாலாபேட்டை காஞ்சனகிரி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மலை ஏறும் போது, அங்குள்ள வளைவு ஒன்றின் அருகே நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
உடனடியாக அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.