ஓய்வுபெற்ற அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கயத்தாறு:
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அங்கன்வாடி சத்துணவு சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ராமலட்சுமி கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜகவீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வருகிற நவம்பர் 25-ந்தேதி திருச்சியில் கண்டன மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், வருகிற 26-ந்தேதி மாநில அளவில் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்றும், அதுவரை அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 20-ந்தேதி வரை கண்டன எழுச்சி பிரசாரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். வட்டார தலைவர் கந்தசாமி நன்றி கூறினார்.