மதுரை மாவட்ட பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் மதுரை மாவட்ட பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-06-20 20:50 GMT


பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் மதுரை மாவட்ட பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 தேர்வு

மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் தேர்ச்சி 97.52 சதவீதம் ஆகும்.

இதே போல், மாநகராட்சி பள்ளிகளில் 95.45 சதவீதமும், முழுவதும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 95.86 சதவீதமும், அரசுப்பள்ளிகளில் 94.48 சதவீதமும், இந்து சமய அறநிலையத்துறை பள்ளியில் 98.47 சதவீதமும், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளில் 96.63 சதவீதமும், பகுதி நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 99.02 சதவீதமும், மெட்ரி குலேசன் பள்ளிகளில் 99.34 சதவீதமும், சுயநிதிப்பள்ளிகளில் 99.53 சதவீதமும், சமூகநலத்துறை பள்ளிகளில் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் 3 பள்ளிகளில் ஒரு பள்ளியும், 16 மாநகராட்சி பள்ளிகளில் ஒரேயொரு பள்ளியும், 42 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 7 பள்ளிகளும், 19 கள்ளர் சீரமைப்புதுறை பள்ளிகளில் 9 பள்ளிகளும், 24 பகுதி நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 15 பள்ளிகளும், 137 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 101 பள்ளிகளும், 11 சுயநிதிப்பள்ளிகளில் 10 பள்ளிகளும், சமூகநலத்துறை பள்ளியும் தேர்ச்சி பெற்று உள்ளன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை பொறுத்தமட்டில் 29 கண்பார்வையற்ற மாணவர்கள், 47 செவித்திறன் குறைந்த, வாய்பேச முடியாத மாணவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள், 44 பிற குறைபாடு உடையவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்கள் 45 பேரும், மாற்றுத்திறன் உடையவர்கள் 23 பேரும், பிற பிரிவுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 88.41 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகளில் 92.48 சதவீதமும், முழுவதும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 93.16 சதவீதமும், அரசுப்பள்ளிகளில் 92.69 சதவீதமும், இந்து சமய அறநிலையத்துறை பள்ளியில் 97.79 சதவீதமும், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளில் 96.25 சதவீதமும், பகுதி நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 95.65 சதவீதமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 98.97 சதவீதமும், சுயநிதிப்பள்ளிகளில் 97.70 சதவீதமும், சமூகநலத்துறை பள்ளிகளில் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் 6 பள்ளிகளில் 3 பள்ளிகளும், 25 மாநகராட்சி பள்ளிகளில் 8 பள்ளிகளும், 50 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், 33 கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளில் 22 பள்ளிகளும், 35 பகுதி நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 11 பள்ளிகளும், 175 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 131 பள்ளிகளும், 12 சுயநிதிப்பள்ளிகளில் 8 பள்ளிகளும், சமூகநலத்துறை பள்ளியும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்