நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாநகரில் நேற்று நள்ளிரவு முதல் வருகிற 14-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அதிகமானோர் கூடுதல், பொதுகூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தக்கூடாது. பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.