அண்ணா உருவச்சிலைக்கு மரியாதை

சமூகரெங்கபுரத்தில் அண்ணா உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-02-03 19:37 GMT

இட்டமொழி:

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராதாபுரம் ஒன்றியம் சமூகரெங்கபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா உருவச்சிலைக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி, மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள், ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு, நிர்வாகி தக்காளிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்