குளித்தலையில், அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித்தர தீர்மானம்
குளித்தலையில், அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித்தர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குளித்தலை வட்டக்கிளையின் 12-வது வட்ட பேரவை கூட்டம் குளித்தலையில் நடந்தது. இதற்கு சங்கத்தின் குளித்தலை வட்ட தலைவர் பாண்டிகண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அன்பழகன், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் வைரப்பெருமாள் சங்க கொடி ஏற்றினார். கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பயனளிப்பு ஓய்வு திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தட்டி பறிக்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 56 மற்றும் 115 தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களைபணி நிரந்தரப்படுத்தவேண்டும். குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி உரிய வசதிகள் செய்ய வேண்டும். குளித்தலை பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.