மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை தவிர்க்க விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை தவிர்க்க வேண்டும் என விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-02 19:31 GMT

புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையில் இணைப்பதை வரவேற்கிறோம். ஏரி, குளங்களின் வரத்துவாரி, வடிகால்களை சரியாக செப்பனிட வேண்டும். விவசாயிகளுக்கு நெல் விலை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கரும்புக்கு ரூ.5 ஆயிரமும் அரசு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்