குளங்களை தூர்வார கோரி தீர்மானம்

குளங்களை தூர்வார கோரி தீர்மானம் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2022-09-30 18:45 GMT

சீர்காழியில், நகர அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பக்கிரிசாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பாபு கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடைேய எடுத்துக்கூற வேண்டும். சீர்காழி பகுதியில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். சீர்காழி புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி மதியழகன், நாகரத்தினம், வார்டு செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்