இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தொிவித்து கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-10-15 18:45 GMT


இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அலெக்சாண்டர், அருண்ராஜ், முருகன், தாஸ், சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய்ஆனந்த் வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள்(தெற்கு) வசந்தம். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., (வடக்கு) உதயசூரியன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு என்பதை திரும்பபெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையர்கன்னி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல். ஆறுமுகம், தெற்கு மாவட்ட துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான புவனேஸ்வரிபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலுஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் தியாகதுருகம் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சின்னசேலம் அன்புமணிமாறன், சங்கராபுரம் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகபிள்ளை, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மடம் பெருமாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான சுப்ராயலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்