கோவில் விவசாய நிலங்களுக்கு அதிக வரி விதிப்பு
கோவில் விவசாய நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக வரி விதிப்பதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கோவில் விவசாய நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக வரி விதிப்பதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிக வரி
தேவகோட்டை அருகே திருமணவயல் ஊராட்சி கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 200 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களில் பல தலைமுறைகளாக இந்த கிராமத்தை சோ்ந்தவா்கள் விவசாயம் செய்து வந்ததாகவும், இந்த விளைநிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை ஏக்கருக்கு சுமார் ரூ.350 வீதம் வரி அறநிலையத்துறை வசூலித்து வந்ததாகவும், தற்போது அதிகாரிகள் கடந்த ஆண்டுகளை விட ஏக்கருக்கு 12 மடங்கு அதிக வரி விதிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அறநிலையதுறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவா் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலத்திற்கு 12 மடங்கு வரிவிதிப்பு செய்தது விவசாயத்தை செய்ய முடியாமல் நிலங்களை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது.
கோவில் விவசாய நிலங்களுக்கு அதிக வரி விதிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகையினை அறநிலையத்துறை பெற்று வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் நிலையில் அவற்றிலும் குறைந்த அளவே விளைச்சலும் உள்ளது.
விவசாயம் இல்லை என்றால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா்.