மீன்கம்பெனியிலிருந்து பணிநீக்கம் எதிரொலி:தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
தூத்துக்குடியில் மீன்கம்பெனியிலிருந்து பணிநீக்கம் எதிரொலியாக தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பப்பட்டனர்.;
தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் கம்பெனியில் தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த நிஷாந்த் (வயது 33), ஆனந்த் (32) லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஜெய்சன் (32) ஆகியோர் வேலை பார்த்து வந்தார்களாம். இந்தநிலையில் அவர்களை, தவறான நடத்தை காரணமாக மீன்கம்பெனி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 3 பேரும், தாங்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மீன்பிடி துறைமுக கூலித்தொழிலாளியான அந்தோணிராஜ் (47) என்பவர்தான் காரணம் என்று நினைத்தனர். இதனால் சம்பவத்தன்று இரவு மீன்பிடி துறைமுகத்தில் 3 பேரும் சேர்ந்து அந்தோணி ராஜை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த அந்தோணிராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து, நிஷாந்த், ஜெய்சன், ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.