கந்தர்வகோட்டை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்

கந்தர்வகோட்டை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2023-09-01 19:08 GMT

சாலை மறியல்

கந்தர்வகோட்டை அருகே உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் தோப்புத்தெருவில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தஞ்சாவூர்-கறம்பக்குடி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி சாலை அமைத்து தருவதாக போலீசார் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்