ரூ.8 கோடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சூரமங்கலத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-05-09 19:39 GMT

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் சாமிநாதபுரம் துரைசாமி லே- அவுட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 20 லட்சத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்படுகிறது. இந்த பணியை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து பள்ளப்பட்டி நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது வார்டுக்குட்பட்ட நந்தனார் தெருவில், ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தில் நடைபெற்று வரும் சாலை பணியை பார்வையிட்டனர். இதே போன்று மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வில் மண்டல குழுத்தலைவர் தனசேகர், மாநகர நல அலுவலர் யோகானந், துணை ஆணையாளர் அசோக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்