மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

Update: 2023-04-18 18:45 GMT

விழுப்புரம்

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளருமான நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பொருளாளர் மணிமாறன், இளைஞரணி செயலாளர் தண்டபாணி, விழுப்புரம் நகர தலைவர் புருஷோத்தமன், செயலாளர் மணிகண்டன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, கிளை நிர்வாகிகள் முருகன், ஆறுமுகம், முருகதாஸ், கார்த்திக், தரணிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் எங்கள் மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும், முடி திருத்தும் கடை வைத்தவர்களுக்கு மானிய மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக விழுப்புரம் கே.கே.நகரில் கோடை காலத்தையொட்டி பொதுமக்களின் வசதிக்காக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, சாலாமேடு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 300 பேருக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்