ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும்-ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் தீர்மானம்

ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-09 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

92-வது ஆண்டு விழா

ஆனைமலை ரோடு (சுப்பேகவுண்டன் புதூர்) ெரயில் நிலையத்தின் 92-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மோகன்ராஜ் தாங்கினார். ரெயில்வே பயணிகள் நலச்சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள், இரயில் பயணத்தின் வசதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மாதாந்திர ரெயில் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் பாலக்காடு-சென்னை ரெயில் ஆனைமலை ரோடு நிலையத்தில் நின்று செல்லவேண்டும். ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும்.

நீட்டிக்க வேண்டும்

பாலக்காடு - கோவை (வழி-பொள்ளாச்சி) மற்றும் பாலக்காடு - மதுரை -திருச்சி மெமு ெரயில்களை ஆனைமலை ரோடு ெரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறு இயக்கவேண்டும். மேலும் ராமேஸ்வரம் - குருவாயூர் / மங்களூர் ெரயில்களை புதியதாக இயக்கி, ஆனைமலை ரோடு ெரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரெயில்,நெல்லை- பாலக்காடு "பாலருவி விரைவு ெரயில் ஆகியவற்றை பொள்ளாச்சி வரை நீட்டித்து, ஆனைமலை ரோடு ெரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்