ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-12-06 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும், விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இதில் தாட்கோ பொது மேலாளர் விஜயலட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்