ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு சிகிச்சை மேற்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடந்தது.

Update: 2023-09-14 20:14 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு சிகிச்சை மேலாண்மை மற்றும் சுகாதார ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குழந்தைகளை டெங்கு பாதிப்பதை தடுப்பது குறித்தும், டெங்கு பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை முறை குறித்தும் அனைத்து சுகாதார பணிகளை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தாய்சேய் நலம். சிறார் நலம். மகப்பேறு மரணம், சிறுவயது கர்ப்பம், ரத்த சோகை, அதிக குழந்தை பெற்றெடுத்தல் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசுகையில், சுகாதார நிலையங்கள் அனைத்தும் தூய்மையாகவும் முறையான வருகைப்பதிவேட்டுடனும், பொதுமக்களுக்கு நல்ல முறையில் பயன்பெறும் வகையில் அனைத்து சுகாதார நிலையங்களும் அமைந்திருக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவத்திட்டம் போன்ற அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றார். கூட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் அவர்கள், துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்