சிறுபான்மையினர் நலவாரிய உறுப்பினர் ஆய்வு

திருவாடானை அருகே வயலில் உள்ள புத்தர்சிலையை சிறுபான்மையினர் நலவாரிய உறுப்பினர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-10 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள சம்பந்த வயல் கிராமத்தில் வயல்வெளியில் அமர்ந்த நிலையில் சுமார் 4 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பந்த வயல் கிராமத்திற்கு நேரில் சென்று புத்தர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் மௌரிய புத்தாவிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதில் நீண்ட காலமாக இந்த கிராமத்தில் புத்தர் சிலை இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இங்கு புத்தர் கோவில் இருந்து மக்கள் வழிபட்டுள்ளனர். தற்போது தொல்லியல் துறையினர் புத்தர் சிலையை ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்களும் புத்தர் சிலையை வணங்கி வருகின்றனர். எனவே இந்த சிலையை வேறு இடத்திற்கு எடுத்து செல்ல கூடாது என்றும், இங்கேயே புத்தருக்கு கோவில் அமைத்து இப்பகுதி மக்கள் வழிபடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது திருவாடானை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தொண்டி ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்