அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-20 18:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதே போல் நூற்றுக்கால் மண்டபம் சாமி கோவில் போன்றவற்றில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த கோவிலை புனரமைப்பு செய்ய வேண்டும் என ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தான நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்ததின் பேரில் அரசு ரூ.2 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ரெகுநாதன், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், மண்டல மின் பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் சேது, கோவில் பொறியாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோவிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் சேதம் அடைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டனர். அப்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர். அப்போது ஆலய குருக்கள் சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்